வியாழன், 26 செப்டம்பர், 2024

நெருப்பாய்க் கொதித்திடும் விருத்தம்

நெருப்பாய்க் கொதித்திடுந் தேக

           நீரின் பெருக்கமுங் கூடுந்
 

திருப்பாய்ப் படுத்திட நாளும் 

         விழிப்பாய் இருப்பது கடினம்
 

நிரப்பா துணவை நோற்று 

      நினைப்பா லொருமுகப் படுத்திப்

 
பொருப்பா ளழகனை யுள்ளப் 

       பொறுப்பான் பிழை நமதன்றே

 

 

 Raja Alangaram Murugan ...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி