வியாழன், 26 செப்டம்பர், 2024

துஞ்சா கலித்துறை

துஞ்சா மனனெங்கோ தோன்றியரு ளஞ்சா மரமெங்கோ
வஞ்சா மனனெங்கோ வாண்டருளுந்  தஞ்சா மரணெங்கோ
பஞ்சா மனனெங்கோ பாங்குறையு நஞ்சான் மகனெங்கோ
நெஞ்சா மனனெங்கோ நேர்ந்திடுவா யெஞ்சா மனனங்கே 


துஞ்சா மனன் எங்கோ தோன்றி அருள் அம் சாமரம் எம் கோ 

அஞ்சா மனன் எங்கோ ஆண்டு அருளும் தஞ்சாம் அரண் எம் கோ 

பஞ்சா மனன் எங்கோ பாங்கு உறையும் நஞ்சான் மகன் எம் கோ 

நெஞ்சு ஆ ம(ன்)னன் எம் கோ நேரந்திடுவாய் எஞ்சா மனன் அங்கே 

 

துஞ்சா மனம் - தூங்காத கவலை உடைய மனம், அவ்வாறு உள்ள போது இறைத்தேடல் வரும் வந்து அழகிய சாமரம்  வீசுவான் எமது கோ,
அஞ்சா மனம்- தனித்தனியே ஒவ்வொன்றுக்கா யஞ்சுவதை விட்டு மொத்தமாக இறைவனிடம் செயலை விட்டால் , தஞ்சமாகவும் அரணாகவும் நிற்பான் எமது தலைவன்,
பஞ்சாக மனமிருந்து விட்டால் அங்கு வந்து அழகாக அமர்வான் சிவன் மகனான முருகன் எமது தலைவன்,
பிறகு ஆ வின் நெஞ்சில் அம்மன்னன் மொத்தமாய் இயக்கத் தொடங்குவான் , அதற்கு நாம் செய்ய வேண்டியது எச்சமே இல்லாமல் மொத்தமாய் அவனில் கரைய வேண்டும்


Thiruchendur Murugan - Indian Art (3.5 ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...