ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

வேறானை கட்டளைக் கலித்துறை

வேறானை யொன்ற விழுப்பொரு ணன்று விளங்கிடுமோ
வேறானை யொன்ற விழுப்பொரு ணன்று விளங்கிடுமே
வேறானை யொன்ற விழுப்பொரு ணன்று விளங்கிடுமோ
வேறானை யொன்ற விழுப்பொரு ணன்று விளங்கிடுமே

படம்

 

 பொருள் 1

இவ்வாறு சீர் பிரிக்க

வேறானை ஒன்ற விழுப்பொருள் நன்று விளங்கிடுமோ
ஏறு ஆனை ஒன்ற விழுப்பொருள் நன்று விளங்கிடுமே
வேல் தானை ஒன்ற விழுப் பொருள் நன்று விளங்கிடுமோ
ஏறு ஆனை ஒன்ற விழுப்பொருள் நன்று விளங்கிடுமே


நாம் வேறு பிறர் வேறு என்ற வேற்றுமைக் கருத்து அகந்தையாகத் தலைதூக்கையில் நமக்கு உயர்ந்த பொருள் நன்று விளங்குமோ ? (இல்லை விளங்காது என்பது கருத்து) ஏறும் ஆனையும் இச்சிற்பத்தில் ஒன்றுவதுபோல் அது மறையத் தொட்ங்கினால் விழுப்பொருள் விளங்கத் தோன்றும் !

வேலை மையமாக வைத்த சேனை முருகனின் தலைமையில் ஒன்று சேர அங்கு வீழ்ந்த பொருளான அசுரன் சூரன் (அகந்தையைக் குறிக்கும்) என்பதை நாம் உணர்கின்றோமோ?
அதே போன்று ஏறும் ஆனையும் அதுனடன் சேர்ந்தே அழியும் (சிங்க முகன் , தாரகன் - சூரனின் சகோதரர்கள்) மறைபொருளாக மும்மலங்களான ஆணவம் கன்மம் மற்றும் மாயையை அழியவைப்பது இறைவன் முருகனின் கருணை மற்றும் அவன் கையில் உள்ள ஞான வடிவான வேலாயுதம்! இதனால் விழுப்பொருள் விளங்கி வீடு பேறு கிட்டும் என்பது கருத்து

படம்

பொருள் 2

இவ்வாறு சீர் பிரிக்க 

 
வேல் தான் ஐ ஒன்ற விழுப்பொருள் நன்று விளங்கிடுமோ
ஏறானை ஒன்ற விழுப்பொருள் நன்று விளங்கிடுமே
வேறு ஆன் ஐ ஒன்ற விழுப்பொருள் நன்று விளங்கிடுமோ
ஏறு ஆனை ஒன்ற விழுப்பொருள் நன்று விளங்கிடுமே


வேலைத் தலைவனான நந்தோகோபன் எப்போதுமே தனது கையில் வைத்திருப்பான் தனது செல்வனான கண்ணனை எந்தச் சிறு தீங்கும் அண்டக் கூடாதென்று இது மிகுந்த பத்தியின் வெளிப்பாடு , வெளித் தோற்றத்துக்குப்  பரமனான கண்ணன் பெருமையில் மயக்கம் ஏற்படலாம், இது இவ்வாறு இருக்கு
ஏறானான (பசு காளைகளை மேய்ப்பவன் , ஆக்களை அந்தர்யாமியாக இருந்து கொண்டு தனது வாகனமாக பயணிப்பவன்) கண்ணனின் சிந்தையில் ஒன்ற தான் தான் விழுப்பொருள் என்று அவனே உணர்த்துவான்
ஆக்கள் வேறு தலைவர்களைச் சிந்தையால் ஒன்றினாலும் அது உண்மையில் அவனைத் தான் சென்றடையும் 'வேறு வேறு ஞானமாகி மெய்யும் பொய்யும்' ஆனவன் அன்றோ!


இச்சிற்பத்தில் உள்ள காளையும் ஆனையும் ஒன்று சேர்வது போல் தோற்ற மயக்கங்கள் நீங்கி அனைத்திற்கும் ஆதி மூலமான பரம்பொருள் தானே என்று விளங்கிடும் அவனருளால்

படம்

 

பொருள் 3 

இவ்வாறு சீர் பிரிக்க

வேறு ஆல் நை ஒன்ற விழுப்பொருள் நன்று விளங்கிடுமோ
ஏறானை ஒன்ற விழுப்பொருள் நன்று விளங்கிடுமே
வேறு ஆனை ஒன்ற விழுப்பொருள் நன்று விளங்கிடுமோ
ஏறு ஆனை ஒன்ற விழுப்பொருள் நன்று விளங்கிடுமே


அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடையும் போது தாங்கள் வேண்டிய அமுதுக்குப் பதிலாக ஆலகால விஷம் வெளிப்பட்டது , இதனால் அவர்கள் நொந்து போனார்கள் அதன் பின்னர் விடை வாகனரான மகா தேவரை வேண்ட அவர் அருள் பாலித்து விடத்தை மிடற்றில் ஏற்று அமுது உயிர்கள் ஏற்க வழி வகுத்தார்

வேறு ஆன்மாக்களை ஒன்ற (சைவ பரமாக பார்க்கும் போது பரமசிவனைத் தவிர ஏனைய அனைவருமே சீவர்கள் தாம்) உயர்ந்த பரம்பொருளான சிவபெருமான் வெளிப்படுவாரோ என்ற ஐயம் வேண்டாம்

இச்சிற்பத்தில் காளையும் ஆனையும் ஒன்றி தோற்ற மயக்கங்கள் நீங்கி உட்பொருள் வெளிப்படுவது போல் தாமே பரமென்று உண்முகமாக இருந்து உணர்த்தும் சிவம்!

படம்

பொருள் 4
இவ்வாறு சீர் பிரிக்க

வேறு ஆன் நை ஒன்ற விழுப்பொருள் நன்று விளங்கிடுமோ
ஏறு ஆன் ஐ ஒன்ற விழுப்பொருள் நன்று விளங்கிடுமே
வேறு ஆன் ஐ ஒன்ற விழுப்பொருள் நன்று விளங்கிடுமோ
ஏறு ஆனை ஒன்ற விழுப்பொருள் நன்று விளங்கிடுமே


ஆன்மா என்பது வேறு என்று நைந்து கொள்ள விழுப்பொருள் நன்று விளங்குமோ ?  மெதுவாக ஞானம் வளர ஏறு முகமாக உள்ள ஆக்கள் தனது தலைவனான பரம்பொருளை ஒன்ற விழுப்பொருள் விளங்கத் தொடங்கும்

என்றாலும் இந்நிலையிலும் கலந்தாலும் ஆ வேறு ஐ வேறு என்ற சிந்தனை இருக்கும்
அதன் பின்னர் இச்சிற்பத்தில் உள்ளார் போல் இரண்டறக் கலப்பு நிகழ்ந்து ஆ என்றும் ஐ என்றும் இரு வேவ்வேறு பொருள் இல்லை, யாவுமே ஒன்று தான் என்ற தெளிவு பிறக்கும்!

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...