வியாழன், 5 செப்டம்பர், 2024

திருக்குலாவும் கலிவிருத்தம்

திருக்குலாவு மாரூர்மே லுருக்கமான செந்தமி
ழிருக்கமைத்த பிள்ளையின் சிறப்புரைத்த செவ்வுரை
கருத்துணர்ந்து கூறினார் கலைச்சிறந்த செல்வனா
ருருக்குவெண்ணெய் கள்வனி னுயர்ந்தநாம மாள்வரே   

 



சீர் பிரித்து

திருக் குலாவும் ஆரூர் மேல் உருக்கமான செந்தமிழ்
இருக்கு அமைத்த பிள்ளையின் சிறப்பு உரைத்த செவ்வுரை
கருத்து உணர்ந்து கூறினார் கலைச் சிறந்த செல்வனார்
உருக்கு வெண்ணெய் கள்வனின் உயர்ந்த நாமம் ஆள்வரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி