சனி, 7 செப்டம்பர், 2024

பூமாலை வெண்பா

பூமாலை சாத்திப் புகழ்பாடிச் செந்தமிழ்ப்
பாமாலை சாத்திப் பதம்பணிவாந் - தீமாலை
தோய்த்த பலகாரந் தந்து கரிமுகனை
யேய்த்த வினையொழிய வின்று



பூ மாலை சாத்திப் புகழ் பாடிச் செந்தமிழ்ப்
பா மாலை சாத்திப் பதம் பணிவாம் - தீம் ஆலை
தோய்த்த பலகாரம் தந்து கரி முகனை
ஏய்த்த வினை ஒழிய இன்று 

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி