புதன், 4 செப்டம்பர், 2024

வானவர்க்கு வெண்பா

வானவர்க்கு வாழ்வளித்த வள்ளி மணாளனை
யானவரை யேத்த வருந்தமிழால் - ஞானக்
கரமான் றரிக்குங் கறைக்கண்டர் மைந்தன்
றிருமான் மருமான் றுணை

 

வானவர்க்கு வாழ்வு அளித்த வள்ளி மணாளனை
ஆன வரை ஏத்த அரும் தமிழால் ஞானக்
கர மான் தரிக்கும் கறைக் கண்டர் மைந்தன்
திருமால் மருமான் துணை

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி