முந்திவந்து மயிலமர்ந்து மூவுலகுஞ் சுற்றியே
கந்தனெந்தை வேண்டிநின்ற கனிகவர்ந்த வித்தைசெய்
தந்தைதாயை யங்கிருந்து தந்திரமாய்ச் சுற்றிய
தந்திமேன்மை சாற்றுகின்ற சந்தமாளு சிந்தையே
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக