புதன், 18 செப்டம்பர், 2024

கருப்பும் சிவப்பும் வெண்பா

கருப்புஞ் சிவப்பு மிருப்பு மழிப்பும்
பொருப்புங் கடலும் புனலு நெருப்பு
மிடமும் வலமு மிடபமும் புள்ளு
முடனுறை கூறென் றுணர்
#வெண்பா

சீர் பிரித்து

கருப்பும் சிவப்பும் இருப்பும் அழிப்பும்
பொருப்பும் கடலும் புனலும் நெருப்பும்
இடமும் வலமும் இடபமும் புள்ளும்
உடன் உறை கூறு என்று உணர்

கருப்பு சிவப்பு எனும் நிறங்கள் கொண்ட , இருத்தல் அழித்தல் எனும் இரு தொழிலைப் புரியும் , கயிலை மலையிலும் பாற்கடலிலும் வசிக்கும் , நீர் நெருப்பு ஆகிய தத்துவத்தின் உருவாக உள்ள , இடப்பக்கமும் வலப்பக்கமுமாக உள்ள , இடப மற்றும் கருட வாகனத்தைக் கொண்ட , திருமாலும் சிவனும் உடன் உறைவார்கள் என்பதால் , அவர்களினது இவ் வனைத்துக் கூறுகளும் உடனுறையும் என்றுணர்வோமாக 

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி