வியாழன், 19 செப்டம்பர், 2024

இக்கட்டிற் கட்டளைக்கலித்துறை

இக்கட்டிற் காக வயரா துழைக்கு மெறும்பனைய
விக்கட்டிற் காக வயரா துழைத்து வினைபுரிய
விக்கட்டிற் காக விரையாய் மடிவோ மெனவுணர்ந்தே
யிக்கட்டிற் காக்க விறைவா யிசைவோ மகந்தொலைத்தே
#கட்டளைக்கலித்துறை

 

 

இக்கு அட்டில்(கு) ஆக அயராது உழைக்கும் எறும்பு அனைய
இக்கட்டிற்கு ஆக அயராது உழைத்து வினைபுரிய
இக் கட்டிற்கு ஆக இரையாய் மடிவோம் என உணர்ந்தே
இக்கட்டின் காக்க இறை வாய் இசைவோம் அகம் தொலைத்தே

இனிப்பைச் சேகரிக்க அயரா உழைக்கும் எறும்பைப் போல் ஒரு கடினமான பொழுதிற்காக கடுமுழைப்புச் செலுத்தியும் (அகந்தை ஒழியாத பொருட்டு) இக் கட்டு நம்மை (பிறப்பிறப்பு என்னுஞ் சுழற்சிக்கு) இரையாய் மாய்க்கும் , ஆதலால் இவ்விக்கட்டினின்று காக்க இறையின் வழி சரணடைவோமாக அகங்காரத்தைத் தொலைத்தே!

If we just keeping working hard (for collecting sweets) like an ant, in the hope that later tougher days will be good , but with still the idea of ‘I’ in mind , this will lead to more bondage and we will perish into an eternal birth death cycle , so , in order to get rid of this trouble we should surrender to God by giving up our (ego) ‘I’ ness

May be an image of 1 person, temple and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...