ஆயயாவுந் தன்னுளேய டங்கநின்று காப்பவன்
காயமேவு கன்றுமேய்க்குங் கண்ணனாக கோகுலம்
வாயடங்கு ஞாலமேழு மந்தமில்சு ழற்சியாய்
மாயவாயன் வாய்திறந்த சோதைகண்ட காட்சியே
சீர் பிரித்து
ஆய யாவும் தன் உள்ளே அடங்க நின்று காப்பவன்
காயம் மேவு கன்று மேய்க்கும் கண்ணனாக கோகுலம்
வாய் அடங்கு ஞாலம் ஏழும் அந்தமில் சூழற்சியாய்
மாய வாயன் / ஆயன் வாய் திறந்து அசோதை கண்ட காட்சியே
பொருள்
எல்லாவற்றிலும் வியாபித்து , தன்னுள்ளே அடங்கும் படியாகவும் அதனை நின்று காப்பவனான திருமால் , ஒரு உடல் எடுத்து கன்றுகளை மேய்க்கும் கண்ணனாக கோகுலத்தில் அவதரித்தனன் , அவனது வாயைத் திறக்கச் சொல்லி அன்னையான யசோதை கேட்ட போது அவன் வாயைத் திறந்து, அதனுள் அனைத்து உலகங்களும் முடிவிலாத சுழற்சியாய் உள்ளதை காண்பித்தான் , என்னே அவள் கண்ட காட்சி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக