செவ்வாய், 15 அக்டோபர், 2024

மலையரையன் வெண்பா செவ்வாயிற் செவ்வேள்

 

மலையரையன் மாள்பெற்ற மாணிக்க மேழு
மலையரையற் கன்பு மருகன் - மலையரையன்
மாக்கயிலை நாத னகமகிழு மாசாற்கு
வாக்கியலால் வாழ்த்தவே நாவு
#வெண்பா
 
 
மலை அரையன் மாள் பெற்ற மாணிக்கம் ஏழுமலை
அரையற்கு அன்பு மருகன் மலை அரையன் மாக் கயிலை
நாதன் அகம் மகிழும் ஆசாற்கு வாக்கு இயலால் வாழ்த்தவே நாவு
மாள் - மகள்
இயல்வாக்கு என்பது செய்யுளின் காரணமாக முன்னும் பின்னாய் வந்ததெனக் கொள்க 
 
May be an image of 2 people, temple and text 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி