ஞாயிறு, 13 அக்டோபர், 2024

திருவும் வெண்பா

 

திருவு முடலின் றிடமு நிலையா
துருவப் பொலிவு மொருநாள் வரையே
கருவங் கொளுதல் கொடுக்கும் பயனென்
மருவாப் பொருளை மருவு
#வெண்பா
 
 
திருவும் உடலின் திடமும் நிலையாது
உருவப் பொலிவும் ஒரு நாள் வரையே
கருவம் கொ(ள்)ளுதல் கொடுக்கும் பயன் என்
மருவாப் பொருளை மருவு
செல்வமும் உடலின் வலிமையும் உருவப் பொலிவும் நிலையாது , அதனால் இந்நிலையற்ற பொருள்களில் பற்று வைப்பதின் பயன் என்னை? மாறாக
மாறாப் பொருளான இறையைச் சேர்வோமாக
Wealth, health, beauty of our form is ephemeral, what is the point of having pride over these? So, embrace the changeless entity (God)!
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...