செவ்வாய், 15 அக்டோபர், 2024

நீரால் விருத்தம்

 

நீராற் றம்பித்த வாழ்க்கை நேராய்த் தாபிப்ப தெளிதோ
நீராற் றம்பித்த வாழ்க்கை நேராய்த் தாபிப்ப தெளிதோ
நீராற் றம்பித்த வாழ்க்கை நேராய்த் தாபிப்ப தெளிதோ
நீராற் றம்பித்த வாழ்க்கை நேராய்த் தாபிப்ப தெளிதே
#அறுசீர்விருத்தம் #ஏகபாதம்
 
 
நீரால் தம்பித்த வாழ்க்கை நேராய்த் தாபிப்பது எளிதோ ?
நீரால் தம் பித்த வாழ்க்கை நேராய்த் தாபிப்பது எளிதோ ?
நீர் ஆற்றும் அம்பு இத்த வாழ்க்கை நேராய்த் தாபிப்பது எளிதோ?
நீர் ஆல் தம்பித்த வாழ்க்கை நேராய்த் தாபிப்பது எளிதே!
மழை நீரால் முடங்கிய வாழ்க்கையை சரி செய்வது எளிதோ? (அன்று)
(அதற்காக) கள்ளுண்டு தம் வாழ்வில் பித்தமேறி வாழ்க்கை சீரழிந்தால் தான் அது சரி ஆகுமா? (ஆகா)
நீர் ஆற்றும் வினைகள் (எய்திய அம்பு வினைக்கு உவமையாக நின்றது) இத்து போன வாழ்வை எங்காவது சரி செய்கிறதா ? (இல்லை)
 
May be an image of text 
நீர் ஆல் (பாற்கடலினின்று வந்த விடத்தின்) பாதிப்பையே நேராகச் செய்த சிவ பெருமான் மனசு வைத்தால் தான் இதற்குத் தீர்வு காணலாம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...