புதன், 16 அக்டோபர், 2024

மீனளை பாவை

மீனளை மன்னு மதுரை யரசியைக்
கானக் கடம்பமுறை கந்தக் குழலியைக்
கூனிலாச் சூடுதலைக்  கூத்தரின் பங்கியை
வானவர் காணா வடிவுடைச் செல்வியை
மோன முனிவர்க ளுள்ளுனர் சோதியை
யூனுருகிப் பாடி யுளமகிழ்ந்து சேவிக்க
ஞான நிலையுங் நவில்கவி செந்நாவுந்
தேனெனச் சித்திக்குஞ் செப்பேலோ ரெம்பாவாய்

 

 சீர் பிரித்து :-

 மீனளை மன்னு மதுரை அரசியைக் 

கானக் கடம்பம் உறை கந்தக் குழலியைக் 

கூன் நிலாச் சூடு தலைக் கூத்தரின் பங்கியை

வானவர் காணா வடிவுடைச் செல்வியை 

மோன முனிவர்கள் உள்ளுணர் சோதியை 

ஊன் உருகிப் பாடி அகமகிழ்ந்து சேவிக்க 

 ஞான நிலையும் நவில் கவி செந்நாவும்

தேன் எனச் சித்திக்கும் செப்பு ஏலோர் எம் பாவாய் 

 

பொருள்  :-

என்றும் மதுரையின் அரசியாக நிலைக்கும் மீனாட்சியைக் , கடம்ப வனத்துறையும் மணக்கும் குழல் உடையவளைக் , கூன் நிலா தனது தலையில் சூடும் சிவ பெருமானின் பாகத்தினளை, வானவர்களும் காணா வடிவிக்கரசியானவளை , மோன முனிவர்கள் தம் உள்ளத்துள் உணரும் சோதி வடிவினளை , ஊன் உருகிப் பாடி உள்ளம் மகிழ்ந்து சேவிக்க , ஞான நிலையும் நவில் கவித் திறனுடைச் செந்நாவும் தேன் எனச் சித்திக்கும் செப்பு     

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி