உலகத் துயிர்க ளுவுப்புடன் வாழ
கலகத் தழிக்குங் கருணை - திலகத்
தணிநீ றழகை யயிலை மயிலைப்
பணிநீ கவிபுனையப் பாங்கு
உலகத்து உயிர்கள் உவப்புடன் வாழ
கலகத்து அழிக்கும் கருணை திலகத்து
அணி நீறு அழகை அயிலை மயிலை
பணி நீ கவி புனையப் பாங்கு
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக