வியாழன், 24 அக்டோபர், 2024

ஓர் மலை வெண்பா

ஓர்மலை மத்தாக்கி யொள்ளரவ நாணாக்கி
யார்க்கடலை யன்று கடைந்தகணங் - கூர்மமாய்
நின்றானைக் கூர்ந்திடுவாய் நெஞ்சே யருமாயை
யொன்றானை யோங்குகரஞ் சேர்த்து

 

 

ஓர் மலை மத்து ஆக்கி ஒள் அரவம் நாண் ஆக்கி 

 ஆர்க்  கடலை அன்று கடைந்த கணம் - கூர்மமாய் 

நின்றானைக் கூர்ந்திடுவாய் நெஞ்சே அரு மாயை 

ஒன்றானை   ஓங்கு கரம் சேர்த்து 


ஓர் மலை - மேரு மலை , ஒள் அரவம் - வாசுகி 

மாயை தான் உருவாக்கும் சக்தி என்பதால் அதில் திருமால் ஒன்ற மாட்டான் 

அன்று பாற் கடலைக் கடைந்த போது ஆமையாய்த் தாங்கிய அரு மாயையில் ஒன்றாத  திருமாலைக் கூர்ந்து நெஞ்சில் நிறுத்திக் கையைச் சேர்த்து உயர்த்தி வணங்கிடுவாய்  

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி