செவ்வாய், 8 அக்டோபர், 2024

கந்தனம்மை கலிவிருத்தம் (ஏகபாதம்)

கந்தனம்மைக் காக்கவெம்மை கட்டமேது மொட்டுமோ
கந்தனம்மை காக்கவெம்மை கட்டமேது மொட்டுமோ
கந்தனம்மைக் காக்கவெம்மை கட்டமேது மொட்டுமோ
கந்தனம்மை காக்கவெம்மை கட்டமேது மொட்டுமோ
#கலிவிருத்தம்

சீர் பிரித்து 


கந்தல் நம்மைக் காக்க வெம் மை கட்டம் ஏதும் ஒட்டும்
மோகம்தன் அம்மை காக்க வெம்மை கட்டம் ஏதும் ஒட்டுமோ?
கந்தன் நம்மைக் காக்க வெம் மை கள் தம் ஏதும் ஒட்டுமோ?
கந்தன் அம்மை காக்க எம்மை கட்டமேதும் ஒட்டுமோ

பொருள் 

கந்தலாடை எவ்வாறு உடலைக் காக்காதோ இவ்வுடலும் உயிரைக் காக்காது என்பதற்கு உவமையாக கந்தல் நின்றது, அஃது நம்மைக் காக்குமென்றிருந்தால் வெம்மை தரும் பிறவி எனும் பிணி மற்றும் அதன் காரணமும் ஒட்டிக்கொண்டே இருக்கும்

மோகத்தின் அம்மையான மாய தேவியான ஆதி பராசக்தி காக்க நமக்கு இன்னலைத் தரக்கூடும் ஜாதக கட்டத்தினால் வரும் காரணம் ஏதும் ஒட்டுமா என்ன(இல்லை)

பற்றுக்கோடாக உள்ள குரு , கந்தன் முருகன் நம்மைக் காக்க (பரகதி அடைய வழி சொல்ல) இருமைகளான வெம்மை, குளிர்ச்சி போன்ற காரணங்கள் நம்மிடம் ஒட்டா!
கந்த மாதாவாக வரும் சக்தி எம்மைக் காக்கிற படியால் எந்த கஷ்டங்களும் நமக்கு ஒட்டவே ஒட்டாது என அறிக


படம்படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வள்ளியம்மை கலி விருத்தம்

வள்ளியம்மை நாதர்தந்த வடிவுயர்ந்த மொழியுனைப் பள்ளிசென்று பயிலவில்லை யென்றிருந்தும் பாவியேற் கள்ளியள்ளி யுன்னையீந்த வளவிலாத வமுதமா யுள்ளமொன்ற...