திங்கள், 7 அக்டோபர், 2024

மந்திபாயும் கலி விருத்தம் (ஸ்கந்த மாதா)

மந்திபாயு சோலைசூழு மின்னுதங்க வெற்புறை
யிந்துசூடு நாதர்பாக மேற்றுவந்த தேவிநீ
கந்தனம்மை யென்றுநின்ற காட்சிகாண விற்றைநாண்
மைந்தரெம்மை வைத்தமைக்கு வாழ்வனைத்து நன்றியே

சீர் பிரித்து

மந்தி பாயு(ம்) சோலை சூழும் மின்னு தங்க வெற்பு உறை
இந்து சூடும் நாதர் பாகம் ஏற்று உவந்த தேவி நீ
கந்தன் அம்மை என்று நின்ற காட்சி காண இற்றை நாள்
மைந்தர் எம்மை வைத்தமைக்கு வாழ்வு அனைத்தும் நன்றியே
 

 

பொருள் 

மந்தி பாயும் சோலை சூழ்ந்த பொன் மலையான கயிலையில் (முசுகுந்தர் வரலாறு காண்க) உறையும் மதியைத் தன் தலையில் அணிந்த நாதரான சிவ பெருமானின் இடப் பாகத்தளாக உவந்து சேர்ந்த தேவியான நீ ஸ்கந்த மாதாவாக நின்ற காட்சியை இன்று உனது மைந்தர்களான எம்மையும் காணும் படி அருளச் செய்தனை, இதற்கு வாழ்வு முழுதும் உனக்கு யாம் நன்றி கூறத் தகும்   

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...