வெள்ளி, 4 அக்டோபர், 2024

யாக்கை வெண்பா

யாக்கை யழியு மழியா தகரமுத
னாக்கைப் பழக்கும் ழகரத்து - வேட்கை
விடுமோ தமிழரைக் காதணியின் மேன்மை
முடிவிலி யின்ப முடைத்து

சீர் பிரித்து

யாக்கை அழியும் அழியாது அகர முதல்
நாக்கைப் பழக்கும் ழகரத்து வேட்கை
விடுமோ தமிழரைக் காதணியின் மேன்மை
முடிவிலி இன்பம் உடைத்து 


படம்படம்படம்படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி