வெள்ளி, 4 அக்டோபர், 2024

குயிலெனப் பேசும் கட்டளைக் கலித்துறை

குயிலெனப் பேசுங் குரலாள் குவலயக் கோள்களையப்
புயலெனப் போரும் புரிவாண் மலரன்ன புன்சிரித்து
மயிடனைச் செற்ற மடவா ணிகரின் மடங்கலேறி
யுயிரெனப் போற்று முலகு மறவா துகவுகமே
#கட்டளைக்கலித்துறை

சீர் பிரித்து

குயில் எனப் பேசும் குரலாள் குவலயக் கோள் களையப்
புயல் எனப் போரும் புரிவாள் மலர் அன்ன புன் சிரித்து
மயிடனைச் செற்ற மடவாள் நிகரில் மடங்கல் ஏறி
உயிர் எனப் போற்றும் உலகு மறவாது உக உகமே


குயிலைப் போன்று இனிமையாகப் பேசக் கூடிய பெண் தெய்வம் என்றாலும் உலகின் இடர் தீர்க்கப் புயலைப் போல் போரும் புரிவாள் !மலர் போன்ற சிரிப்பால் மஹிஷாசுரனைச் செற்றனள் தனது சிங்க வாகனமேறி இப்பேற்பட்ட ஒப்பற்ற தேவியின் புகழை எத்தனை யுகமானாலும் உலகு மறவாது போற்றும்

She who talks sweetly like a cuckoo, in order to cleanse the world of its problems can fight like a whirlwind too! With a flower like smile she killed Mahishasura mounted on her peerless lion , the prowess of this great Goddess will never be forgotten by the world in any age !

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...