புதன், 9 அக்டோபர், 2024

அம்பிறங்கி கலி விருத்தம்

அம்பிறங்கி யானைராச னங்ககவ்வு முதலையை
யம்புறங்கு வாதிதேவ ரங்குசென்ற வக்கணந்
தம்பிறங்கு நேமிகொண்டு தத்தவேவு கருணையை
யம்பரும்ப ரிம்பரென்று நின்றுபோற்றி மகிழ்வரே   
#கலிவிருத்தம்



அம்பு இறங்கு யானை ராசன் அங்க(ம்) கவ்வு முதலையை
அம்பு உறங்கு ஆதி தேவர் அங்கு சென்ற அக் கணம்
தம் பிறங்கு நேமி கொண்டு தத்த ஏவு கருணையை
அம்பர் உம்பர் இம்பர் என்றும் நின்று போற்றி மகிழ்வரே   

 

அம்பு - நீர் 

பிறங்கு - ஒளிரும் 

அம்பர் - அங்கே 

உம்பர் - வானவர் 

இம்பர் - இப்புவியினர் 

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி