புதன், 9 அக்டோபர், 2024

காமாட்சி சோலை மலை சிலேடை வெண்பா


தூயவன் பாளுந் தலைமை மலைமாதா
மாயவன் றங்கை யயிலாட்சி - சேயுடை
யாமாட்சி செய்யு மழகிரு தேவிமலைக்
காமாட்சிக் கீடில்லை காண்



1 சீர் பிரித்து
தூய அன்பு ஆளும் தலைமை மலை மாதா

மாயவன் தங்கை அயில் ஆட்சி சே உடை

ஆம் ஆட்சி செய்யும் அழகு இரு தேவி மலைக் 

காமாட்சிக்கு  ஈடு இல்லை காண்

பொருள்
தூய அன்பு ஆளும் தலைமைப்  பண்புடை மலை அன்னையான, மாயவனின் தங்கையான , கூர் விழிகள்  உடையவளான , நந்திகேசுவரர்  காப்பாளராக உடைய வீட்டிற்கு அரசியான  ,அழகும் பெருமையும் பொருந்திய ஒப்பற்ற  காமாக்‌ஷிக்கு ஈடில்லை காண்பீர்


2  சீர் பிரித்து

தூய அன்பு ஆளும் தலைமை மலை மா தா

மாய அன்று அம் கை அயில் ஆட்சி - சேய் உடை

ஆம் ஆட்சி செய்யும் அழகு இரு தேவி 

மலைக்கா மாட்சிக்கு ஈடில்லை காண்

பொருள்
தூய அன்பு ஆளும் தலைமை (ஆனவன்),
மலையாகவும் மாமரமாகவும் நின்ற குற்றமுள்ளவனான சூரன் மாய அன்று அழகிய கையில் (ஏந்தி) வேல் ஆட்சி செய்யும் ,  முருகனின் படைவீடாக ஆளும் இரு அழகிய தேவியர் சூழ விளங்கும் மலைச் சோலைக்கு (சோலை மலைக்கு)ஈடில்லை காண்பீர்

 

Kanchi Kamakshi - A Dedication - AchyuthanPazhamudircholai Murugan Temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...