செவ்வாய், 12 நவம்பர், 2024

நினையா வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

நினையா நிலையொழிய நின்னை நிதமு
மனையா யருளு மழகே - யெனையாளு
மீச னிளமைந்த வின்றமிழா லென்றுமுனைப்
பேசப் பெறப்பெற்றேன் பேறு

 

 

நினையா நிலை ஒழிய நின்னை நி(த்)தமும்
அ(ன்)னையாய் அருளும் அழகே எ(ன்)னை ஆளும்
ஈசன் இள மைந்த இன் தமிழால் என்றும் உ(ன்)னைப்
பேசப் பெறப் பெற்றேன் பேறு 

 

நின்னை நினையாத நிலை ஒழிய நித்தமும் அன்னையாய் அருளும் அழகே என்னை ஆளும் ஈசன் இள மைந்த! இன் தமிழால் உன்னை என்றும் பேசப் பெறப் பெற்றேன் பேறு

 #முருகன்

 


படம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி