புதன், 13 நவம்பர், 2024

செருப்பு விளக்குமாறு வெண்பா

செருப்புக் கெருமைச் சிரத்தசுரன் வீழ
வுருப்புக்க வுத்தமியை யுள்ளக் - கருப்புக்
குழலும் பிறப்பிறப் போயு மிதுபே
ரெழிலி விளக்குமா றே 


சீர் பிரித்து:-

 

செருப் புக்கு எருமைச் சிரத்து அசுரன் வீழ

உரு புக்க உத்தமியை உள்ளக் கருப் புக்கு

உழலும் பிறப்பு இறப்பு ஓயும் இது பேர் 

எழிலி விளக்கும் ஆறே 

 

எருமைத் தலையை உடைய அசுரனான மகிஷாசுரனை வீழ்த்த உருக் கொண்ட உத்தமியான துர்க்கை தேவியை உள்ள (தியானிக்க) நாம் இன்னொரு கருவில் புகுந்து பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் உழல்வது ஓயும்! இது பேரழகை உடைய தேவியின் (கருணையால்) விளங்கும் வழியாம்! 

Let us meditate on the peerless Goddess Durga who took an avatar to fight and win over the Buffalo headed Asura , Mahishasura. This will lead us to escape the cycle of endless births and deaths and this salvation would happen due to the love of the Goddess of peerless beauty!

செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிய எழுதியது , காளமேகப் புலவரின் வெண்பாவைத் தழுவி

 


படம்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...