திங்கள், 11 நவம்பர், 2024

அரைவந்த வெண்பா

 

அரைவந்த போது மலுக்காதைந் தாட்டந்
தரைவந்து நின்ற தடுப்பாட்ட மாடிக்
கரைவந்து வென்றான் கதிகலங்கச் சென்னை
யரவிந்த் சிதம்பர மான்று
 
 
அரை வந்த போதும் அலுக்காது ஐந்து ஆட்டம்
தரை வந்து நின்று தடுப்பு ஆட்டம் ஆடிக்
கரை வந்து வென்றான் கதி கலங்கச் சென்னை
அரவிந்த் சிதம்பரம் ஆன்று
Despite drawing the first five games, keeping his defenses solid, when the time arrived, like a flood that crosses the banks took Chennai (Grand-masters event) by storm, Aravind Chithambaram won excellently!
 
May be an image of 1 person, chess and text 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...