செருப்புக்குச் சீருரை யாயிரஞ் சாற்றித்
திருப்புக்கு மார்பரங்கன் றேர்ந்த - குருப்புக்
குயர்ந்தாரின் றாள்பற்றி யுய்நெஞ்சே மாலை
வியந்தார் விளக்குமா றே
செருப்புக்குச் சீர் உரை ஆயிரம் சாற்றித்
திருப் புக்கு மார்பு அரங்கன் தேர்ந்த குருப் புக்கு
உயர்ந்தாரின் தாள் பற்றி உய் நெஞ்சே மாலை
வியந்தார் விளக்கும் ஆறே
பொருள்
திருமகட்குப் புகலிடமாக வுள்ள மார்பினைக் கொண்ட அரங்கனின் செருப்புக்குச் சீருரை ஆயிரஞ் (பாதுகா சஹஶ்ரம்) சாற்றித் தேர்ந்த குருவினைப் (வேதந்த தேசிகரைப்) புகலாகக் கொண்டுயர்ந்தாரின் தாளைப் பற்றி (வழிவழியாக ஆசாரியன் மரபில் வந்தோரைச் சரண்புக்கு) உய்வாயாக நெஞ்சே!இது தான்
திருமாலை வியந்து போற்றிய ஆழ்வார்கள், ஆசாரியர்கள் நமக்குபதேசித்த வழி!
Vedanta Desikar wrote a treatise of one thousand poems on the paadukas (footwear) of Sriranganatha who holds Goddess Sri in his bosom. People who come in the guru disciple parmapara of doing sharanagathi to a great guru such has him, surrender to them oh mind! This is the way of Salvation enlisted by the devotees of Mahavishnu (AzhwArs and subsequent teachers) who were always in awe of him and constantly sang his praises in their divine hymns!
செருப்பு என்ற அமங்கலச் சொல்லில் வெண்பா தொடங்கியது அல்லது பெருமாளின் திருப்பாதுகைகளை அது இழிவாகக் குறிக்கின்றது என்ற மறுப்பு வந்தால் , செருப் புக்கு என்னும் சொல்லை வாதங்களில் ஈடுபட்டு எனவும் கொள்ளலாம் , சுவாமி வேதாந்த தேசிகர் பிற சம்ப்ரதாய வல்லுனர்களுடன் வாதங்கள் புரிந்து தம் நிலையை நாட்டினார் (சீருரை சாற்றினார் எனவும் கொள்ளல் தகும்)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக