சனி, 16 நவம்பர், 2024

திருப்புகழ் மதிவண்ணன் அவர்களது 75ஆம் பிறந்த நாள் வாழ்த்து விருத்தம்

கார்த்திகையின் கார்த்திகையி லவனிவந்து 

                       கண்குளிர பவளவிழாக் கண்டுவந்து
 

கார்த்திகேயன் கவிபாட மனங்குளிர்ந்து 

                கவியுலகின் சஷ்டியப்தம் பூர்த்திசெய்து


நேர்த்தியுறப் பலநூல்கள் செய்துவந்து 

                நிகரற்ற வேழுதேவ பூசைசெய்து
 

பார்த்தனவன் சாரதியின் பெயர்கொண்ட 

                   பல்லாண்டு மதிவண்ணர் வாழியவே

 

-அறு சீர் விருத்தம்

 


திருப்புகழ் மதிவண்ணன் அவர்களின் இயற்பெயர் - இராஜகோபாலன், அவர் தனது 15 வயதிலிருந்து கவியாக உள்ளார் , சிறப்பாக ஏழு தெய்வங்கள் கொண்ட திருப்புகழ் பூஜை செய்து வருகிறார்

 

 May be an image of 1 person

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...