வெள்ளி, 29 நவம்பர், 2024

செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

செவ்வேளைச் சிந்திக்கச் செவ்வேளை யாகாதோ
வெவ்வேளை யென்றாலுஞ் செவ்வாயே - யிவ்வேளை
யெண்ணற்குப் பேறளித்தா னென்றுவந்து நன்றிசைப்போம்
பண்ணிற்குப் பாடல் புகழ்ந்து



செவ்வேளைச் சிந்திக்கச் செவ்வேளை ஆகாதோ ?
எவ்வேளை என்றாலும் செவ்வாயே ! இவ்வேளை
எண்ணற்குப் பேறு அளித்தான் என்று உவந்து நன்று இசைப்போம்
பண்ணிற்குப் பாடல் புகழ்ந்து


மணிராஜ்: வசீகரிக்கும் வைகாசி விசாகத்திருநாள்.. | Lord murugan, Lord ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி