திங்கள், 2 டிசம்பர், 2024

செவ்வாய்த் திருமகன் - செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

செவ்வாய்த் திருமகனை யெவ்வா றிசைத்துரைக்க
வொவ்வாத வற்றை யொழித்துயர - வவ்வா
றறிந்தா லெடுத்துரைப்பீ ரான்றோர்கா ணானுஞ்
செறிந்த தமிழ்செய்ய சீர் 

 

 

செவ்வாய்த் திருமகனை எவ்வாறு இசைத்து உரைக்க

ஒவ்வாதவற்றை ஒழித்து உயர - அவ்வாறு

அறிந்தால் எடுத்து உரைப்பீர் ஆன்றோர்காள் நானும்

செறிந்த தமிழ் செய்ய சீர் 

 

பொருள் கோள் முறை :-

ஒவ்வாத வற்றை ஒழித்து உயர, செவ்வாய்த் திருமகனை எவ்வாறு இசைத்துரைக்க ? அவ்வாறு அறிந்தால் எடுத்துரைப்பீர் ஆன்றோர்காள் நானும் ( அவனை ) செறிந்த தமிழ்ச் செய்ய சீர்

Setting aside the non conducive stuff, in order to grow, how do I sing the praises of the Lord of Mars (Skandha)? If you know the way please let me know oh esteemed ones, so that I too can praise him with powerful Thamizh words

 #முருகன்

 

படம்


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி