வியாழன், 5 டிசம்பர், 2024

தமதுவேட்கை கலிப்பா

 

தமதுவேட்கை யுருவெடுக்கக் கடிகைநேரங் கடிகையின்
மமதையற்ற தவமமர்ந்து மனமுவந்து பத்தர்கள்
கமலமொத்த விழிதிறக்குங் கதியளிக்குங் கார்த்திகை
யமுதவல்லி யுடனிருக்கும் யோகசிங்கங் காண்பரே
 
#தரவுகொச்சகக்கலிப்பா
 
 
 
தமது வேட்கை உருவெடுக்கக் கடிகை நேரம் கடிகையில்
மமதை அற்று தவம் அமர்ந்து மனம் உவந்து பத்தர்கள்
கமலம் ஒத்த விழி திறக்கும் கதி அளிக்கும் கார்த்திகை
அமுதவல்லி உடன் இருக்கும் யோக சிங்கம் காண்பரே
 
The fulfilment of one's desires is accorded by meditating for even just 24 minutes in Ghatikachala, and devotees subduing their ego do this and come to see the lotus like eyes which are opened only in the auspicious month of Karthika, of Yoga Narasimha who resides here along with Amirthavalli (MahaLakkshmi)
 
படம் 108 வைணவ திவ்ய தேச உலா - 64 | சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோயில் | 108  Vaishnava Trip Sholingur Yoga Narasimha Perumal Temple - hindutamil.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...