வையம்வென்று வாகைசூடி நின்றிருந்த போதிலு
மையநின்ற மேன்மைகொண்ட மாந்தனென்று மைந்தனை
வையமெங்கும் வீற்றிருக்கு மாந்தர்சொல்லு மேற்றமே
யையமின்றி யின்பமீனு மீன்றதாய்க்கு ஞான்றுமே
#கலிவிருத்தம்
வையம் வென்று வாகை சூடி நின்று இருந்த போதிலும்
மையம் நின்ற மேன்மை கொண்ட மாந்தன் என்று மைந்தனை
வையம் எங்கும் வீற்று இருக்கும் மாந்தர் சொல்லும் ஏற்றமே
ஐயம் இன்றி இன்பம் ஈனும் ஈன்ற தாய்க்கு ஞான்றுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக