செவ்வாய், 17 டிசம்பர், 2024

கொல்லவரும் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 கொல்லவருங் கொடியவரைக் கொடியாக்கிக்  

                க்ரெளஞ்சகிரி குலைத்திட்டு மயிலாக்கிப்


புல்லவரும் புலவர்களின் புகழ்மணக்கப் 

                போற்றுதமிழ் புந்தியமர்ந் தான்றுரைத்த
 

வல்லவரும் வானவரும் பணிந்தேத்த 

                  வள்ளியமை மனமகிழ்ந்த வேடவனே
 

சொல்லவருங் கருத்துனையே ப்ரதிபலிக்க 

                  நல்லவரம் நயந்தருள்வாய் சேயவனே 

 

#முருகன்

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி