திங்கள், 30 டிசம்பர், 2024

தில்லையில் நால்வர்

 


ஆனந்தக் களிப்பு :-

(கூத்துக்குப் பேர்போன நாதன் – தில்லைக்

கோவிலை யாளு நடனத்தின் ராஜன்)

 

 

 

பாலைக் கொடுத்தாண்ட பாலன் – உன்

பார்வைக்கு நேர்வந்த ஞானத்தின் சீலன்

 

சூலை கொடுத்தாண்ட தாசன் – மேற்கு

த்வாரத்து வந்ததூ நாவுக் கரசன்

 

ஓலை கொடுத்தாண்ட தோழன் – புறத்

துன்னை யணைத்தாளு நம்பியா ரூரன்

 

காலைக் கொடுத்தாண்ட சீடன் – கீழ்

வாயிலிற் றோன்றிடுஞ் சீர்வாத வூரன்

 

திருஞான சம்பந்தர் சிவபெருமனுக்குச் சிறுக்குழந்தை, அதனால் அவர் தந்தையைப் பார்த்தவுடன் நேரடியாக ஓடி வருவார், ஆதலால் தில்லையில் தெற்கு வாசலிலிருந்து வருகிறார்

திருநாவுக்கரசர் தாஸ்ய பாவத்தில் பெருமானைத் துதிப்பவர் அதனால் அவர் நேரில் வந்து பார்க்க வரவியலாது, மேற்குத் திக்கிலிருந்து பக்க வாட்டில் வருகின்றார்

சுந்தரமூர்த்தி நாயனார் பெருமானுக்குத் தோழராக இருந்தவர், அதனால் அவர்க்கு மட்டுமே பின்புறத்திலிருந்து வந்து முதுகைத் தட்டவும் அணைக்கவும் உரிமை உண்டு. அதனால் அவர் வடக்கு வாயிலிலிருந்து வருகிறார்

மாணிக்கவாசகர் பெருமானுக்குச் சீடர், அதனால் அவர் கிழக்கு வாசலிலிருந்து வருகிறார்

 

இக்கருத்து திரு மதுசூதன் கலைச்செல்வன் அவர்களின் உரையைக் கேட்டு அதை பாடல் வடிவில் வடிக்கப் பெற்றது 

 

#நால்வர் #சிவன்

 


https://www.youtube.com/watch?v=lDkH2y8PTB0&t=3424s 

 

சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன் 

சைவ சமயக் குரவர் (நால்வர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி