புதன், 1 ஜனவரி, 2025

வில்லேந்து கலி விருத்தம்

வில்லேந்து வீரனல்லேன் வெற்றியைச் சமர்ப்பிக்கக்
கல்லேந்து கோவில்செய்யக் கைத்திறனோ சற்றுமில்லை
சொல்லேந்து பாவமைக்கத் தூமதியைத் தந்தனைநீ
பல்லாண்டு போற்றிசைத்தல் பாவிக்கு முய்வன்றே
#கலிவிருத்தம்

 



வில் ஏந்து வீரன் அல்லேன் வெற்றியைச் சமர்ப்பிக்கக்
கல் ஏந்து கோவில் செய்யக் கைத் திறனோ சற்றும் இல்லை
சொல் ஏந்து பா அமைக்கத் தூ மதியைத் தந்தனை நீ
பல் ஆண்டு போற்று இசைத்தல் பாவிக்கும் உய்வு அன்றே

படம்படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி