மூன்றுலோக மாழ்ந்துபார்க்கு மூரலிந்த மூரலே கான்றுநின்ற நாதரன்பு காதலித்த மூரலே யான்றதேவர் மூவரேத்து மருளளிக்கு மூரலே யீன்றதாயி னழகுகாண வென்கொடுத்து வைத்தமே
சீர் பிரித்து
மூன்று லோகம் ஆழ்ந்து பார்க்கும் மூரல் இந்த மூரலே கான்று நின்ற நாதர் அன்பு காதலித்த மூரலே ஆன்ற தேவர் மூவர் ஏத்தும் அருள் அளிக்கும் மூரலே ஈன்ற தாயின் அழகு காண என் கொடுத்து வைத்தமே ?
பொருள்
மூவலகங்களிளும் இப்படிப் பட்ட சிரிப்பு இல்லை என்று அனைவரும் ஆழ்ந்து வியக்கும் சிரிப்பை உடையவள், ஒளிப் பிழம்பாய் நின்ற ஈசன் காதலித்தது அச்சிரிப்பு, தேவரும் மூவரும் ஏத்தும் அருளுடையது அச்சிரிப்பு, அப்பேற்பட்ட எம்மை ஈன்ற அன்னை திரிபுரசுந்தரியின் அழகுச் சிரிப்பைக் காண என்ன கொடுத்து வைத்தோமோ நாம்!
The three Lokas stand in awe as they have never seen such a smile, the Lord who stood as a beam of light, fell in love with this smile, The Devas and Trimurtis keep praising this grace giving impeccable smile, to see such beauty of our mother TripuraSundari what great deeds have we done in the past?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக