ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

மாவமர்ந்த விருத்தம் (பெருமாட்குமிட்டிலிக்குஞ் சிலேடையாக)

மாவமர்ந்த மார்புடைத்த மாசிலாத நேமியாய்
நாவமர்ந்து நல்லருள்ள ஞான்றுஞான்று போற்றுவார்
பூவமர்ந்த வாறுபாத மாக்கமென்ன மேன்மையா
யாவிவந்த சங்குநாத மாட்சிகூற லாகுமே

#கலிவிருத்தம்

மா அமர்ந்த மார்பு உடைத்த மாசு இ(ல்)லாத நேமியாய்!

நா அமர்ந்து நல்லர் உள்ளம் ஞான்றும் ஞான்றும் போற்றுவர்

பூ அமர்ந்த ஆறு பாதம் ஆக்கம் என்ன மேன்மையாய்

ஆவி வந்த சங்கு நாத! மாட்சி கூறல் ஆகுமே?
பொருள் 1 பெருமாள் மா அமர்ந்த மார்பை உடைய மாசு இல்லாத நேமியனே உன் நாமத்தை நாவி லென்றென்றும் நல்ல உள்ளம் உடையவர்கள் போற்றுவர் இப்பூவுலகத்தில் உள்ள ஆறு பாதைகள் ஆக்கத்திலும் நீ தான் மேன்மையானவன் நீ உயிர்களின் உள்ளம் புகுந்தனையே சங்கு நாதா !உன் மாட்சியைக் கூறுவது சாத்தியமோ?

Oh Lord who has Mahalakshmi living in his chest, is blemish less and holds a Chakra, people with goodness in their heart always sing your names and glories, the sixfold path in this earth all submit to your greatness, Oh Lord who lords the conch (Shankadhari) you enter every living being and shine as their antaryami, can your praises be enumerated at all!

No photo description available.

மாவு அமர்ந்த மார் புடைத்த மாசு இ(ல்)லாத நேமி ஆய்

நாவு அமர்ந்து நல்லர் உள்ளம் ஞான்றும் ஞான்றும் போற்றுவர்

பூ அமர்ந்த ஆறு பாதம் ஆக்கம் என்ன மேன்மையாய்

ஆவி வந்த சங்கு நாதம் ஆட்சி கூறல் ஆகுமே ?

பொருள் 2  இட்லி மாவாக அமர்ந்திருப்பாய் சமைத்ததும் உனது மார்பு புடைக்கும், மாசு இல்லாத சக்கர வடி வுடைய பண்டம் நீ உன்னை சுவைக்க நாவில் வைக்கும் போது சுவை அதியற்புதம் என்று என்றென்றும் போற்றுவர் நல்லர்!

பூவில் அமர்ந்த ஆறுபாதமான வண்டின் ஆக்கமான தேனைப் போன்று நீயும் மிக மேன்மையான படைப்பு! ஆவி வந்தவன் நீ சங்கு போல வளைந்த உருவமும் உனக்குண்டு சமைக்கும் போது எழுப்பும் ஓசையும் தனித்துவம் வாய்ந்தது அதன் ஆளுமையை எம்மால் கூற இயலுமோ? அன்று ! 

 You are formed from batter, when cooked your chest expands! you are of a nice round shape like a wheel, when people taste you bit by bit by placing you on their tongue, they sing your praises always, you are also a fine creation like the honey bee's creation of honey, you are made from steam and have a curved shape, you make a unique sound while getting cooked, who can say that they have mastered you?

 

 Ready Made Idli Ready To Eat Idly, Packaging Size: 400 g at ₹ 5/piece in  Coimbatore

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி