செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

வைப்பேதும் வெண்பா (தைப்பூசம்)

வைப்பேது மில்லாது வையத்தில் வந்திழிந்த
கைப்பாவை நாமென்று கண்டுணர்ந்து - தைப்பூச
நாயகனைத் தப்பாம னாளுந் தொழுமனனே  
போயகலப் பொல்லா வினை

 

 

 வைப்பு ஏதும் இல்லாது வையத்தில் வந்து இழிந்த

கைப்பாவை நாம் என்று கண்டு உணர்ந்து தைப்பூச

நாயகனைத் தப்பாமல் நாளும் தொழு மனனே

போய் அகலப் பொல்லா வினை

 படம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...