செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

கைப்பேசி வெண்பா (தைப்பூசம்)

கைப்பேசி தானுலகாய்க் காணுஞ் சமயமிது
பொய்ப்பேசு மாந்தர் புகலிடமு மஃதேதான்
மைப்பூசு மாதர்க்குத் தூண்டிலு மங்கேதான்
கைப்பாவை யானோங் கலிக்கென் றுணராம
லுய்ப்பாதை தேடி யுணர்வுருகித் தேம்பாமன்
மெய்ப்பார்வை வேண்டிவடி வேலனைப் பாடாமன்
மாப்பாடு பட்டுழன்று மன்னிப்பு நாடாமற்
கூப்பாடு போடுமெங் குற்றங் களைந்திட்டுத்
தைப்பூசச் சேந்தா திருத்து

 

கைப்பேசி தான் உலகாய்க் காணும் சமயம் இது 

பொய் பேசும் மாந்தர் புகல் இடமும் அஃதே தான்

 மைப் பூசும் மாதர்க்குத் தூண்டிலும் அங்கே தான் 

கைப்பாவை ஆனோம் கலிக்கு என்று உணராமல்

உய்ப் பாதை தேடி உணர்வு உருகித் தேம்பாமல்

மெய்ப் பார்வை வேண்டி வடிவேலனைப் பாடாமல்

மாப் பாடு பட்டு உழன்றும் மன்னிப்பு நாடாமல்

கூப்பாடு போடும் எம் குற்றம் களைந்திட்டுத்

தைப்பூசச் சேந்தா திருத்து 

 

படம்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்