வியாழன், 13 பிப்ரவரி, 2025

சேவிக்க வெண்பா

சேவிக்கக் காமாட்சி சீர்பாதந் தந்தருள்வாள்
பாவிக்கும் பாரபட்சம் பார்க்காத பாங்கினளா
மாவிக்கு முள்ளொளிரு மக்கினியா மம்பிகையைப்
பாவிக்கப் பத்துமோ வாழ்வு

 

 

சீர் பிரித்து

 சேவிக்கக் காமாட்சி சீர்பாதம் தந்து அருள்வாள்

பாவிக்கும் பார பட்சம் பார்க்காத பாங்கினளாம்

ஆவிக்கும் உள் ஒளிரும் அக்கினியாம் அம்பிகையைப்

பாவிக்கப் பத்துமோ வாழ்வு  


சேவிக்க வரும் பத்தர்களுக்கு அவர்கள் வேண்டினால் தனது சீர்பாதத்தையே தந்து அருளும் அளவிலாக் கருணை உடையவள் அன்னை காமாட்சி, இதில் நல்லவர் பாவி என்றெல்லாம் வேறுபாடு பாராட்டாத பாங்கு உடையவள், ஒவ்வொரு உயிரின் உள்ளும் அந்தர்யாமியாக ஒளிரும் அக்கினி சொரூபமான அன்னை அம்பிகையைப் நாம் பாவித்துப் பருக , கண்டு இரசிக்க இவ்வாழ்வு எவ்வாறு போதுமானதாக இருக்கும் !

 

For the devotees who come to see her, if they so wish, Kamakshi is ready to give them even ultimate salvation or her holy feet, she does not make a distinction between a saint or a sinner as she is an epitome of compassion! The same Goddess resides inside every Jiva as the inner light as Agni swaroopa, to drink all this beauty how can this life be enough time!

 

Sri Kanchi Kamakshi Amman Temple Shaktipeeth (Naval), Kanchipuram, Tamil  Nadu - Sannidhi The Presence

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்