மருந்தேச் சுரர்க்கு மருந்தாய்த் திகழுந்
திருந்து திரிபுர சுந்தரி தாயார்
பொருந்து புதல்வர் புடைசூழ நிற்கும்
விருந்தை விழியா லருந்து
மருந்தேச்சுரர்க்கு மருந்தாய்த் திகழும்
திருந்து திரிபுர சுந்தரி தாயார்
பொருந்து புதல்வர் புடை சூழ நிற்கும்
விருந்தை விழ்யால் அருந்து
மருந்தேஸ்வரர்க்கும் கூட மருந்தாய் திகழ்வது அம்மை திரிபுர சுந்தரி, அவள் தானே அவர் விடமருந்தும் போது அதை அமுதை மாற்றினாள்! அத்திருந்து திரிபுர சுந்தரி தாயானவள் திருவான்மீயூர் திருத்தலத்தில் தனது இரு புதல்வர்களான விநாயகரும் முருகனும் பக்கம் இருக்க நமக்கு விருந்தாய் நிற்கின்றாள், அவ்விருந்தை நாம் அருந்த வேண்டாமா!
Even for the Lord Maruntheswara of Tiruvanmayur, you are the medicine who converted the poison in his neck into ambrosial nectar, oh epitome of beauty mother Tirupara Sundari, in this temple of Tiruvanmayur you stand flanked by your sons Murugan and Vinayagar , and are a feast for our eyes.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக