வியாழன், 13 பிப்ரவரி, 2025

அமர்சத்தி அறுசீர் விருத்தம்

அமர்சத்தி கோலங் காணின் 

        அவள்பாதம் மதியின் ஒளியாம்

தமர்க்கொருவர் தீங்கு செய்யின் 

        கணந்தோன்றி தூண்பிறந்து மடி
 

அமர்த்திக் கோனூன் பிளந்த 

           அரிக்கிதயம் மதியின் ஒளியாம்
 

நமர்சித்த லிங்கம் காணீர்  

            நடுப்பாதி மதியின் ஒளியே

 

 

அமர் சத்தி கோலம் காணின் அவள் பாதம் மதியின் ஒளியாம்

தமர்க்கு ஒருவர் தீங்கு செய்யின் கணம் தோன்றி தூண் பிறந்து மடியமர்த்திக்

கோன் ஊன் பிளந்த அரிக்கு இதயம் மதியின் ஒளியாம்

நமர் சித்த லிங்கம் காணீர் நடுப் பாதி மதியின் ஒளியே 


When you see the seated form of Goddess Shakti, the moon light becomes her feet, when you visualise the Lord who unable to bear even a moment when his devotee was wronged and emerged from the pillar and killed HiranyaKashipu by  placing him on his lap,that Lord Narasimha, the moonlight becomes his heart and if you can visualise our wisdom giving Shiv Lingam, then the central part again becomes the moonlight

 

 

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்