உலகாளுந் தேவியி னுக்கிர ரூபம்
பலகாலம் பத்தர்க்குப் பாங்காய்ச் - சலமாளுஞ்
சங்கரர் கோவிலிற் சக்கரந் தோடேற்றிச்
சங்கரர் தான்றணித்தார் சீர்
உலகு ஆளும் தேவியின் உக்கிர ரூபம்
பல காலம் பத்தர்குப் பாங்காய்ச் - சலமாளும்
சங்கரர் கோவிலில் சக்கரந் தோடு ஏற்றி
சங்கரர் தான் தணித்தார் சீர்
உலகாளும் அகிலாண்டேஸ்வரி தேவியின் உக்கிர ரூபம் தணியும் பொருட்டும், பத்தர்க்குப் பாங்காய் அமையும் பொருட்டும் நீர் லிங்கம் உள்ள திருவானைக்காத் தலக் கோவிலில் அம்பிகையின் தாடங்கத்தில் ஸ்ரீ சக்கரம் ப்ரதிஷ்டை செய்தார் ஆதிசங்கரர்
To pacify Goddess Akhilandeswari in the holy Jala Linga Sthalam of Thiruvanaikka and make her contained to be worshipped by the common devotees, Adi Shankara Bhagavath Pada did Pratishta of Srichakra in her ear rings (Thatanka Prathishtai)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக