வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

வள்ளியம்மை கலி விருத்தம்

வள்ளியம்மை நாதர்தந்த வடிவுயர்ந்த மொழியுனைப் பள்ளிசென்று பயிலவில்லை யென்றிருந்தும் பாவியேற் கள்ளியள்ளி யுன்னையீந்த வளவிலாத வமுதமா யுள்ளமொன்றி யுன்னைவேண்ட வொப்பிலாத பாவையே

 

 

வள்ளி அம்மை நாதர் தந்த வடிவு உயர்ந்த மொழி உ(ன்)னை

பள்ளி சென்று பயிலவில்லை என்று இருந்தும் பாவியேன்கு

அள்ளி அள்ளி உன்னை ஈந்த அளவு இ(ல்)லாத அமுதமாய்

உள்ளம் ஒன்றி உன்னை வேண்ட ஒப்பு இ(ல்)லாத பாவையே 

 

வள்ளி அம்மை நாதரான முருகன் கொடையாய் தந்த உயர்ந்த மொழியாகிய உன்னைப் பள்ளியில் சென்றும் இப்பாவியேன் பயிலவில்லை என்ற போதிலும்உன்னை மனமொன்றி வேண்டிய போது அளவு கடந்த அமுதமாய் நீ உன்னை அள்ளி தந்தனை அல்லவே ஒப்பிலாத தமிழ்ப் பாவையே ! 

 You who were given by the Lord of Valli (Murugan) are a language with an incomparable beauty.Even though this sinner has not studied you formally in school, you magnanimously gave yourself as a endless elixir, when sincerely wished for, oh peerless damsel (Thamizh Mother)

தமிழ்த்தாய் வாழ்த்து 'மாநிலப் பாடலான' வரலாறு. – பூ.கொ.சரவணன் பக்கங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வள்ளியம்மை கலி விருத்தம்

வள்ளியம்மை நாதர்தந்த வடிவுயர்ந்த மொழியுனைப் பள்ளிசென்று பயிலவில்லை யென்றிருந்தும் பாவியேற் கள்ளியள்ளி யுன்னையீந்த வளவிலாத வமுதமா யுள்ளமொன்ற...