நாலுங் கடந்தவ ணாரண னெஞ்சவள்
பாலங் கடலுதித்த பாங்கினள் - ஞாலங்
கடந்தவள் ஞானங் கடந்தவள் காலங்
கடந்தவள் காப்பா ளெமை
நாலும் கடந்தவள் நாரணன் நெஞ்சவள்
பால் அம் கடல் உத்தித்த பாங்கினள் ஞாலம்
கடந்தவள் ஞானம் கடந்தவள் காலம்
கடந்தவள் காப்பாள் எமை
விழிப்பு உறக்கம் கனவு துரியும் என்ற நான்கு நிலைகளையும் கடந்தவளான அழகிய பாற்கடலில் உதித்த மிக்க அழகு உடைத்தவளான, நாரணன் நெஞ்சில் உறைபவளான ஞாலத்தை கடந்தவளான, ஞானங்களுக்கு அப்பாற்பட்டவளான , காலத்தையும் கடந்தவளான திரு எம்மை காப்பாள்
She who is beyond the 4 states of Sleep, wakefulness, dream and Turiya, she who lives in the Narayana's heart, she who arose out of the beautiful milky ocean, she who is beyond the universe knowledge and time that Goddess Sri will save us!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக