செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

அன்னையென்று ஆசிரியப்பா

அன்னையென் றேங்குவார்க் கன்புபா லூட்டி
யத்தனென் றாள்வர்க்கு ஞானமாய் நின்று
தன்னையென் றேத்துவார்க்குத் தலைவனா யாண்டு
நண்பனென் றடைவர்க்குத் தோளினைத் தந்து
பொன்னையே வேண்டுவார்க் கர்த்தமே யீந்து
முன்னையே நாடுவார்க் குண்மையாய்த் தோன்று
முன்வினை யாவுமே முற்றிலு நீங்க
முருகனா யுடன்வரு முடிவிலா முதலே
சொன்னயம் பாடவே யுன்னைச்
செந்தமிழ் தந்தருள் செந்தில்வாழ் கோவே

 

 

அன்னை என்று ஏங்குவோர்க்கு அன்பு பால் ஊட்டி

அத்தன் என்று ஆள்வர்க்கு ஞானமாய் நின்று

தன் ஐ என்று ஏத்துவார்க்குத் தலைவனாய் ஆண்டு

நண்பன் என்று அடைவார்க்குத் தோளினைத் தந்து 

பொன்னையே வேண்டுவார்க்கு அர்த்தமே ஈந்தும்

உன்னையே நாடுவார்க்கு உண்மையாய்த் தோன்றும் 

முன் வினை யாவுமே முற்றிலும் நீங்க 

முருகனாய் உடன் வரும் முடிவு இ(ல்)லா முதலே 

சொல் நயம் பாடவே உன்னைச்

செந்தமிழ் தந்தருள் செந்தில் வாழ் கோவே 

 

For those who long for a mother you come and feed the milk of love, for those who want a father you come as wisdom, for those who want a God you come as their leader/God,  for those who want a friend you lend your shoulder, for those who want wealth, you give that and make them understand the meaning of life, for those who want you only you come as the truth and destroy all earlier Karmas  as Murugan  with no beginning or end, to compose poems on you with beautiful words, please grant us the grace of Chenthamizh, oh Lord of Thiruchendhur!

 

படம்

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி