வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

தேசமோங்கு கலி விருத்தம்


தேசமோங்கு திரிபுரத்துச் சுந்தரிச் சமேதரா
யூசலாடி யோய்வெடுக்கு முன்னதனை விழிகளா
லாசைதீர வநுபவிக்க வருளளித் தமைத்தனன்
பாசமற்றுப் பசுவிருக்கப் பதியளித்த பேறிதே



தேசம் ஓங்கு திரி புரத்துச் சுந்தரி சமேதராய்
ஊசல் ஆடி ஓய்வு எடுக்கும் உன்னதனை விழிகளால்
ஆசை தீர அநுபவிக்க அருள் அளித்து அமைத்தனன்
பாசமற்றுப் பசு இருக்கு பதி அளித்த பேறு இதே

பிரகாசம் மிக்க திரிபுர சுந்தரி அம்மன் சமேதராக ஊசல் ஆடி ஓய்வெடுக்கும் மருந்தேஸ்வரரை ஆசை தீர கண்டனுபவிக்கும் காட்சியை எமக்கு அமைத்தருளினன் , ஈசனும் தனது திருவருளாகிய அம்பிகையையும் சேவிக்க வைத்து பசுவின் பாசத்தை அறுக்கும் கருணை மிக்க பதி அளித்த பேறு இதுவாம்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...