நீறுமொன்று மண்ணுமொன்று நேயநன்று வந்தபி
னாறுமொன்று வாற்றலொன்று வன்புணர்ந்து கொண்டபின்
கூறுமொன்று சிந்தையொன்று குற்றமில்லை யென்றபின்
மீறுமொன்று வாழ்விலெங்கு மீனள்பாதங் காக்குமே
நீறும் ஒன்று மண்ணும் ஒன்று நேயம் நன்று வந்தபின்
ஆறும் ஒன்று ஆற்றல் ஒன்று அன்பு உணர்ந்து கொண்ட பின்
கூறும் ஒன்று சிந்தை ஒன்று குற்றமில்லை என்ற பின்
மீற ஒன்று வாழ்வில் எங்கு ? மீனள் பாதம் காக்குமே
திருநீறோ திருமண்ணோ அதன் வேறுபாடுகள் மறைந்திவிடும் நேயம் தோன்றும் போது
வழியும் வழிநடத்தும் ஆற்றலும் ஒன்றாகிவிடும் அன்பு உணர்ந்த பின்னர்
இவ்வாறு செய்து அனைத்து கூறுகளும் மனமும் ஒன்றிசைத்துச் சிந்தையையும் நாம் ஒன்றி குற்றமற்ற நிலைக்குச் சென்றபின் (எவ்வழிழையும் இகழாமல்)
நம்மைத் தடுக்க வாழ்வில் ஏதேனும் ஒன்று உண்டோ? ஏனென்றால் இந்நிலையில் அம்மை மீனாக்ஷியின் திருவடி நமக்குக் காப்பாக இருக்குமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக