புவனமேழி னரசியான புகழறாத பாவையோ
கவனமாக கலைகளாழக் கடையுணர்ந்த பாவையோ
சிவனுமாழ வநுபவிக்குந் திருவுடைத்த பாவையோ
ரவிநிலாவும் விழிகளாகி ரதமுடைத்த பாவையே
சீர் பிரித்து
புவனம் ஏழின் அரசியான புக அறாத பாவையோ
கவனமாக கலைகள் ஆழ கடை உணர்ந்த பாவையோ
சிவனும் ஆழ அநுபவிக்குந் திரு உடைத்த பாவையோ
ரவி நிலாவும் விழிகள் ஆகு இரதம் உடைத்த பாவையே
ஏழு புவனங்களின் அரசியோ இவள்
கலைகள் யாவும் அதன் கடை நிலை வரை உணர்ந்தவளோ
சிவனும் கூட ஆழ அனுபவிக்கும் திரு உடைத்தவளோ
ரவியும் நிலவும் விழிகளாகக் கொண்ட இரதம் (ரதம்/ரசம்) உடைத்த பாவையாம்! சூரியனையும் சந்திரனையும் தேரின் சக்கரங்களாகவும் கொண்டவள், அனைத்திற்கும் சாறாக (ரசமாக இருப்பவளும் இப்பாவையே) முப்பெரும் தேவியும் நித்திய சுமங்கலியாகவும் விளங்குபவள் இவள் தான்!
She rules all universes, she knows all arts minutely and to the very end, she is the one who brings wholeness of experience to Shiva too, Sun and the moon are her eyes and she holds them as her chariot wheel too, and she is the essence of all things as smaller than the smallest, and it goes without saying that she is bigger than the biggest!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக