பவமறுக்கத் தவமிருக்கு நலமுடைத்த விரவினிற்
சிவமுகத்தி லலங்கரித்துத் திருமகட்குப் பூசனை
தருவிருப்ப விலுவமுஞ் சிவநிறத்து மேனியு
மிருவரொத்த வொருகருத் தெனவுணர்த்து மறிமினே
சீர் பிரித்து
பவம் அறுக்கத் தவம் இருக்கும் நலம் உடைத்த இரவினில்
சிவ முகத்தில் அலங்கரித்துத் திருமகட்குப் பூசனை
தரு விருப்ப விலுவமும் சிவ நிறத்து மேனியும்
இருவர் ஒத்த ஒரு கருத்து என உணர்த்தும் அறிமினே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக