சனி, 8 பிப்ரவரி, 2025

மன்மதற்கு கலி விருத்தம்

மன்மதற்கு ரூபமீட்டு மாண்பளித்த தேவிநீ
சண்மதற்கு மூலாமான சார்வளிக்குஞ் சாட்சியா
கன்மமற்று வாழ்வுதோறுங் கன்னியுன்னை யேத்திட
வென்மனத்த மர்ந்திருந்தி யக்கிவைக்கு மன்னையே 

#கலிவிருத்தம்

சீர் பிரித்து

மன்மதனுக்கு ரூபம் மீட்டு மாண்பு அளித்த தேவி நீ

ஷண் மதற்கும் மூலம் ஆன சார்வு அளிக்கும் சாட்சியா(க)

கன்மம் அற்று வாழ்வு தோறும் கன்னி உன்னை ஏத்திட

என் மனத்து அமர்ந்து இருந்து இயக்கி வைக்கும் அன்னையே

 

விளக்கம்

 மன்மதனுக்கு சாபம் நீங்க உருவை மீட்டுத் தந்து அவனுக்கு மீண்டும் மாண்பு அளித்த தேவியான நீ தான் அறு சமயத்தவர்க்கும் சார்வு அளிக்கும் சாட்சியாக உள்ளாய் . எனது முயற்சி ஏதுமில்லாமல் இவ்வாழ்வு தோறும் என்றும் இளையோளே உன்னையே துதிக்கும் படியாக எனது மனத்துக்குள் அமர்ந்து இயக்கி வைக்கும் சக்தியான அன்னையும் நீ தானே 

Oh Goddess you relieved Kama of his curse and made him get back his old form and gave him respectability, you are the foundation and give sustenance to all six ways of religion, on your own you came and surrounded me with your limitless grace by housing yourself inside my mind oh mother and are helping me in singing your praises throughout my life!

 

படம்

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்